தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சென்னை ஓபன்: வைஷ்ணவி அபாரம்: இரண்டாவது சுற்றுக்கு தகுதி

சென்னை ஓபன்: வைஷ்ணவி அபாரம்: இரண்டாவது சுற்றுக்கு தகுதி

சென்னை ஓபன்: வைஷ்ணவி அபாரம்: இரண்டாவது சுற்றுக்கு தகுதி


ADDED : நவ 04, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் வைஷ்ணவி.

சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. ‘வைல்டு கார்டு’ வாய்ப்பு பெற்ற இந்தியாவின், 21 வயது, வைஷ்ணவி அத்கர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் ஜோடீ புரேஜை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 3–6 என இழந்தார் வைஷ்ணவி. பின் சுதாரித்த இவர், அடுத்த செட்டை 6–3 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட் 5–5 என இழுபறி ஆனது.

கடைசியில் வைஷ்ணவி 7–5 என வசப்படுத்தினார். 2 மணி நேரம், 44 நிமிடம் நீடித்த இப்போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 3–6, 6–3, 7–5 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

டிஜென் அபாரம்



நடப்பு சாம்பியன், இத்தொடரின் ‘நம்பர்–1’ அந்தஸ்து பெற்ற இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், முதல் சுற்றில் 6–1, 6–2 என, அமெரிக்காவின் கேத்தரினை எளிதாக வென்றார்.

கடந்த 2022ல் சாம்பியன் கோப்பை வென்ற, செக் குடியரசின் லிண்டா, இம்முறை முதல் சுற்றில் 6–7, 4–6 என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் வெரோனிகாவிடம் தோல்வியடைந்தார்.

உலகத் தரவரிசையில் 93வது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தானின் போலினா குடர்மேடோவா, 6–3, 4–6, 6–1 என்ற கணக்கில் சுலோவாகியாவின் விக்டோரியாவை வீழ்த்தினார்.

மற்ற முதல் சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் அனஸ்டாசியா ஜஹரோவா, ஸ்பெயினின் ஆக்சனா, இத்தாலியின் லுகிரிஜியா வெற்றி பெற்றனர்.

சபாஷ் மாயா



உலகத் தரவரிசையில் 669 வது இடத்திலுள்ள, இந்தியாவின் 17 வயது மாயா, ‘நம்பர்–117’ ஆக உள்ள போலந்தின் கேட்டர்ஜினா கவாவை சந்தித்தார். முதல் செட்டை மாயா 6–4 என வென்றார். இரண்டாவது செட்டை 2–6 என நழுவவிட்டார். மூன்றாவது செட்டில் 2–5 என பின்தங்கிய மாயா, பின் 5–5 என சம நிலைக்கு சென்றார். பின் ௭–௬ என வென்றார். முடிவில் மாயா 6–4, 2–6, ௭–௬ என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us