உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 04, 2026 03:20 PM

அ நிறம் | அளவு
பிர்னோ: செக் குடியரசில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில், உலகின் 48 வது இடத்திலுள்ள, இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 28, இத்தொடரின் ‘நம்பர்–1’ அந்தஸ்து பெற்ற ஸ்காட்லாந்தின் கிரெக் லாப்பனை (‘நம்பர்–31’) எதிர்கொண்டார்.
முதல் செட்டில் வேலவன் 6–10 என பின்தங்கி இருந்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர், 13–11 என போராடி வென்றார்.
அடுத்த செட்டை 11–5 என எளிதாக கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கிரெக் 11–8 என வசப்படுத்தி, பதிலடி தந்தார்.
அடுத்து நடந்த நான்காவது செட்டில் அசத்திய வேலவன் 11–7 என கைப்பற்றினார். முடிவில் வேலவன் 3–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் வேலவன் வென்ற 12வது பட்டமாக இது அமைந்தது.
