உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 03, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மாயா, வைஷ்ணவி, சஹாஜா ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடக்க இருந்த ஒற்றையர், இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஒற்றையர் பிரிவுக்கான 16 போட்டிகள் இன்று நடக்க வுள்ளன. ஒருவேளை மழை நின்றால் இன்று காலை 11 மணி முதல், போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
