/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: சாதனை படைத்தார் ஆரித்
/
செஸ்: சாதனை படைத்தார் ஆரித்
ADDED : டிச 09, 2024 11:08 PM

புவவேஸ்வர்: செஸ் போட்டியில் 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் இந்தியரானார் ஆரித் கபில்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் ரஷ்ய 'கிராண்ட்மாஸ்டர்' போரிஸ் சாவ்செங்கோ, 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் 9வது சுற்றில் இளம் இந்திய வீரர் ஆரித் கபில் 9, அமெரிக்க 'கிராண்ட்மாஸ்டர்' ராசெட் ஜியாடினோவை 66, வீழ்த்தினார். இதன்மூலம் செஸ் அரங்கில் 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார் டில்லியை சேர்ந்த ஆரித் கபில் (9 ஆண்டு, 2 மாதம், 18 நாள்).
சர்வதேச அளவில் இச்சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ஆரித். முதலிரண்டு இடங்களில் சிங்கப்பூரின் அஷ்வத் கவுஷிக் (8 ஆண்டு, 2 மாதம்), செர்பியாவின் லியோனிட் இவானோவிச் (8 ஆண்டு, 11 மாதம்) உள்ளனர்.
இத்தொடரில் ஆரித் கபில், 6.0 புள்ளிகளுடன் 62வது இடம் பிடித்தார்.