ADDED : மே 04, 2024 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மொராக்கோவில் நடக்கவுள்ள செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மொராக்கோவில் வரும் மே 18-19ல் காசாபிளாங்கா செஸ் தொடர் நடக்கவுள்ளது. இதில் நான்கு கண்டங்களை சேர்ந்த முன்னணி கிராண்ட்மாஸ்டர்ஸ் பங்கேற்கின்றனர். ஆசியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் களமிறங்குகிறார். ஐரோப்பா சார்பில் உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகிறார்.
வடக்கு அமெரிக்கா சார்பில் உலகின் 'நம்பர்-3' அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஆப்ரிக்கா சார்பில் ஏழு முறை ஆப்ரிக்க செஸ் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்தின் அமின் பாசின் பங்கேற்கின்றனர்.
இதில் முன்னாள் உலக சாம்பியன்களான ஆனந்த், கார்ல்சன் மோதும் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.