ADDED : நவ 14, 2026 10:14 PM

புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் தொடரில் அர்ஜுன், சோ வெஸ்லேவை வென்றார்.
ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர்.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜுன், அமெரிக்காவின் சோ வெஸ்லேவை எதிர்கொண்டார். முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 53 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் அர்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 13 நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.
இதே பிரிவில், வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசாராவை சந்தித்தார். முதல் போட்டியில் வைஷாலி தோல்வியடைந்தார். அடுத்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 35 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ‘சி’ பிரிவில் அர்ஜுன் (9 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார். வைஷாலி (4) கடைசி இடத்தில் (6வது) உள்ளார்.
‘பி’ பிரிவில் உள்ள பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் ஆர்டமியவை எதிர்கொண்டார். இதன் இரு போட்டிகளும் ‘டிரா’ ஆகின. 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
