தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஜூனியர் தொடரில் செஸ்: பிரனவ் ‘சாம்பியன்’

உலக ஜூனியர் தொடரில் செஸ்: பிரனவ் ‘சாம்பியன்’

உலக ஜூனியர் தொடரில் செஸ்: பிரனவ் ‘சாம்பியன்’


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல் அய்ன்: உலக ஜூனியர் ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரனவ், கோப்பை வென்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக ஜூனியர் ‘ரேபிட் அண்டு பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 40 நாடுகளில் இருந்து, 20 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் 185 பேர் பங்கேற்றனர்.

‘பிளிட்ஸ்’ பிரிவில் (அதிவேகம்) தலா 3 நிமிடம் கொண்டதாக போட்டி நடக்கும். கடந்த ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் பிரனவ், 20, (தமிழகம்) உள்ளிட்டோர் களமிறங்கினர்.

மொத்தம் 13 சுற்று கொண்டதாக போட்டி நடந்தது. முதல் நாளில் 6 சுற்றில் வெற்றி பெற்றார் பிரனவ். தொடர்ந்து நேற்றும் அசத்திய இவர், மொத்தம் 10.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனார்.

* ஓபன் ‘ரேபிட்’ பிரிவில் (தலா 15 நிமிடம்) 91 பேர் பங்கேற்றனர். இதில் பிரனவ், 7.0 புள்ளி பெற்றார். இரண்டாவது இடத்தை அஜர்பெய்ஜானின் சமதோவுடன் (7.0) பகிர்ந்து கொண்டார். உஸ்பெகிஸ்தானின் பெக்முரடோவ் (7.5) சாம்பியன் ஆனார்.

* பெண்களுக்கான ‘ரேபிட்’ பிரிவில் இந்தியாவின் சவிதா ஸ்ரீ, 5.5 புள்ளியுடன் 10 வது இடம் பெற்றார்.

* பெண்களுக்கான ‘பிளிட்ஸ்’ பிரிவில் இந்தியாவின் ஆமுக்தா, 9.0 புள்ளியுடன், 5வது இடம் பிடித்தார். சவிதா ஸ்ரீக்கு (8.5) 7வது இடம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us