/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அரவிந்த் சிதம்பரம் 'சாம்பியன்' * சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடரில்...
/
அரவிந்த் சிதம்பரம் 'சாம்பியன்' * சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடரில்...
அரவிந்த் சிதம்பரம் 'சாம்பியன்' * சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடரில்...
அரவிந்த் சிதம்பரம் 'சாம்பியன்' * சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடரில்...
ADDED : நவ 11, 2024 11:16 PM

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் ஆனார். 'டை பிரேக்கரில்' அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சாய்த்தார்.
சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. ஆறு சுற்று முடிவில் அமெரிக்காவின் ஆரோனியன் (4.0), அர்ஜுன் (4.0), அரவிந்த் (3.5) 'டாப்-3' ஆக இருந்தனர். நேற்று ஏழாவது, கடைசி சுற்று போட்டி நடந்தன.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) மோதிய போட்டி 'டிரா' ஆனது. இந்தியாவின் விதித் குஜ்ராத்தி-சரனா (ரஷ்யா), லெவான் ஆரோனியன் (அமெரிக்கா)-அமின் (ஈரான்) இடையிலான போட்டி 'டிரா' ஆகின. இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஈரானின் பர்ஹாமை வென்றார்.
முடிவில் அரவிந்த் (4.5), ஆரோனியன் (4.5), அர்ஜுன் (4.5) என மூவரும் சம புள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளி அடிப்படையில் அரவிந்த், முதலிடம் பெற்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் பைனல் 'டை பிரேக்கரில்' பங்கேற்க தகுதி பெற்றார். அடுத்த இரு இடத்தில் இருந்த ஆரோனியன்-அர்ஜுன் மோதினர்.
இதில் வென்றால் அரவிந்துடன் மோதலாம் என்ற நிலையில் முதல் இரு போட்டியில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். அடுத்த போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி 'டிரா' செய்ததால், ஆரோனியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அர்ஜுன் 3வது இடம் பிடித்தார்.
அரவிந்த் அசத்தல்
அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அரவிந்த், ஆரோனியனை எதிர்கொண்டார். முதல் இரு போட்டியிலும் அசத்திய அரவிந்த், 2.0-0 என வெற்றி பெற்றார். சென்னை கிராண்ட்மாஸ்டர் தொடரின் சாம்பியன் ஆனார்.
கோப்பை வென்றார் பிரனவ்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரில் முதன் முறையாக சாலஞ்சர் பிரிவில் போட்டி நடந்தன. இதில் இந்தியாவின் 8 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நேற்று கடைசி, 7வது சுற்று நடந்தன. கார்த்திகேயன் முரளி, வைஷாலியை வென்றார். பிரனவ்-லியான், ஹரிகா-பிரனேஷ், ரவுனக்-அபிமன்யு மோதிய மற்ற போட்டிகள் 'டிரா' ஆகின.
முடிவில் 5.5 புள்ளி பெற்ற பிரனவ், முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றார். லியான் (5.0), ரவுனக் (4.0) 2, 3வது இடம் பெற்றனர்.