/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: அர்ஜுன் கலக்கல் வெற்றி * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில்...

ADDED : நவ 09, 2024 12:10 AM

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கிறது. நேற்று, நான்காவது சுற்று நடந்தன. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் அமின் மோதினர். கருப்பு நிற கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் அர்ஜுன். சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன், 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவரது மூன்றாவது வெற்றியாக அமைந்தது.
இந்திய வீரர்கள் விதித் குஜ்ராத்தி, அரவிந்த் சிதம்பரம் உட்பட மற்ற வீரர்கள் மோதிய 3 போட்டியும் 'டிரா' ஆகின. நான்கு சுற்று முடிவில் அர்ஜுன் 3.5 புள்ளியுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஆரோனியன் (2.5), அமின் (2.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
பிரனவ் 'ஹாட்ரிக்'
சாலஞ்சர் பிரிவில் நேற்று 4வது சுற்று நடந்தன. இந்தியாவின் பிரனவ், வைஷாலியை வீழ்த்தி, இத்தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்றார். கார்த்திகேயன் முரளி, ஹரிகாவை வென்றார். மற்ற இரு போட்டி 'டிரா' ஆகின.
நான்கு சுற்று முடிவில் பிரனவ் (4.0), லியான் (3.0), ரவுனக் (2.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். வைஷாலி (0.5), ஹரிகா (0.5) கடைசி இரு இடத்தில் (7, 8) உள்ளனர்.