ADDED : ஜூலை 19, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாசில்,'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்,நான்காவது தொடர் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்ற அர்ஜுன்,அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார்.
முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். அடுத்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அர்ஜுன், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 44 நகர்த்தல் வரை சமநிலையில் சென்ற இப்போட்டியில், அடுத்தடுத்து செய்த தவறு காரணமாக, அர்ஜுன் 50 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். முடிவில் அர்ஜுன் 2.0-0 என வீழ்ந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.