/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: நிஹால் சரின் 'ஹாட்ரிக்'
/
செஸ்: நிஹால் சரின் 'ஹாட்ரிக்'
ADDED : ஜன 08, 2026 10:36 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.
முதலில் 'ரேபிட்' முறையிலான போட்டி நடக்கின்றன. நேற்று 3 சுற்று நடந்தன. ஆனந்த், சக வீரர் அர்ஜுன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 58 வது நகர்த்தலில் ஆனந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
பின் சுதாரித்த ஆனந்த், 5வது சுற்றில் அமெரிக்காவின் ஹன்ஸ் மோக்கை வென்றார். 6வது சுற்றில் ரஷ்யாவின் முர்ஜினை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 63 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் நிஹால் சரின், 4வது சுற்றில் ஹன்ஸ் மோக், 5வது சுற்றில் முர்ஜினை வீழ்த்தினார். 6வது சுற்றில் சக வீரர் விதித் குஜ்ராத்தியை வென்று, தொடர்ந்து 3 வெற்றியை ('ஹாட்ரிக்') பதிவு செய்தார்.
முதல் 6 சுற்று முடிவில் இந்தியாவின் ஆனந்த் (4.5), நிஹால் சரின் (4.5), அமெரிக்காவின் சோ வெஸ்லே (4.0) 'டாப்-3' ஆக உள்ளனர். அர்ஜுன் (3.5), பிரக்ஞானந்தா (3.5) 4, 5 வது இடத்தில் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் வந்திகா 5 (3.0), ஹரிகா 6 வது (2.5) இடங்களில் உள்ளனர். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி 8 (2.5), ரக்சித்தா 9 (2.5), உலக கோப்பை வென்ற திவ்யா, கடைசி, 10வது (2.0) இடத்தில் (10) உள்ளனர்.

