
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் ஆறாவது சுற்று நடந்தது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், தோல்வியை நோக்கிச் சென்றார். 59 வது நகர்த்தலில் நாடிர்பெக் தவறு செய்ய, வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குகேஷ், 66 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் இ மோதிய மற்றொரு போட்டியும் 'டிரா' ஆனது. ஆறு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (4.5), பிரக்ஞானந்தா (4.5), குகேஷ் (4.0) 'டாப்-3' ஆக உள்ளனர்.
மற்ற இந்திய வீரர்கள் ஹரி கிருஷ்ணா (3.5) 5, அர்ஜுன் (1.5) 13, மெடோன்கா (1.5) 14வது இடத்தில் உள்ளனர்.

