ADDED : நவ 27, 2024 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான்டெசில்வானோ: உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப்பில் 6 வயது இந்திய வீரர் திவித் சாம்பியன் ஆனார்.
இத்தாலியில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டி அதுல்லா (ஐதராபாத்) உட்பட 123 பேர் களமிறங்கினர். 11 சுற்று முடிவில் இந்தியாவின் திவித் ரெட்டி அதுல்லா, சாத்விக் ஸ்வைன், சீனாவின் குவா ஜிமிங், என மூன்று வீரர்கள் தலா 9.0 புள்ளி பெற்றனர்.
இருப்பினும் 'டை பிரேக்கர்' ஸ்கோரில் முதலிடம் பிடித்த திவித், சாம்பியன் ஆனார். சாத்விக் இரண்டாவது இடம் பிடித்தார்.
12 வயது பிரிவில் இந்திய வீரர் ஆன்ஸ் நந்தன், 4வது இடம் பிடித்தார்.

