சீன வீராங்கனை முதலிடம்: ஆசிய விளையாட்டு 100 மீ., ஓட்டத்தில்
சீன வீராங்கனை முதலிடம்: ஆசிய விளையாட்டு 100 மீ., ஓட்டத்தில்
ADDED : செப் 25, 2026 10:17 PM

நகோயா: ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு, பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 11.06 வினாடியில் கடந்த சீனாவின் யுஜி சென் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சிங்கப்பூரின் சாந்தி பெரெய்ரா (11.21 வினாடி), சீனாவின் எடிடியோங் ஓடியோங் (11.33 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
* ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் தாய்லாந்தின் புரிபோல் பூன்சன் (9.90 வினாடி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஓமனின் அல் பாலுஷி அலி (10.04 வினாடி), அல் பாலுஷி மல்ஹாம் (10.11 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் ஏமாற்றம்
ஆண்களுக்கான கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி (102/7), 5 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்திடம் (103/5, 17.2 ஓவர்) தோல்வியடைந்தது. 'பி' பிரிவு லீக் போட்டியில் ஹாங்காங் அணி (121/8), 41 ரன் வித்தியாசத்தில் ஓமனை (80/6) வென்றது.
கால்பந்து: உஸ்பெகிஸ்தான் முன்னேற்றம்
ஆண்களுக்கான கால்பந்து காலிறுதியில் உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் உஸ்பெகிஸ்தான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் தென் கொரிய அணி 4-0 என, வியட்நாமை வென்றது.
பெண்களுக்கான காலிறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை தோற்கடித்தது. வட கொரிய அணி 5-1 என, சீனதைபே அணியை வீழ்த்தியது. சீன அணி 1-0 என, வியட்நாமை வென்றது.
கூடைப்பந்து: தென் கொரியா அபாரம்
பெண்களுக்கான கூடைப்பந்து அரையிறுதியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 85-80 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் அணி 80-52 என, சீனதைபே அணியை தோற்கடித்தது.
