தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில்...

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில்...

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில்...


UPDATED : செப் 25, 2026 10:49 PM

ADDED : செப் 25, 2026 10:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 10:49 PM ADDED : செப் 25, 2026 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 3-1 என, ஜப்பானை வீழ்த்தியது.

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி 'பி' பிரிவு லீக் போட்டியில், இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு லால்ரெம்சியாமி (5வது நிமிடம்), இஷிகா சவுத்ரி (30வது), நவ்னீத் கவுர் (36வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஜப்பான் அணிக்கு ஷிஹோ கோபயகாவா (46வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

முதல் மூன்று போட்டியில் உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா, தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துது. 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

கபடி: பைனலில் இந்தியா

ஆண்களுக்கான கபடி அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது. இதில் இந்திய அணி 66-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டில் 9வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான கபடி அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. இந்திய அணி 48-24 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

ஸ்குவாஷ்: ஜோஷ்னா-வேலவன் அசத்தல்

ஸ்குவாஷ் போட்டிக்கான கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி 2-0 (11-3, 11-5) என்ற கணக்கில் பிலிப்பைன்சின் பெலினோ டேவிட், அரிபடோ ஜெமிகா ஜோடியை வீழ்த்தியது.

* பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என, சகவீராங்கனை தான்வி கன்னாவை வீழ்த்தினார்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபே சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என, ஜப்பானின் யுனோசுகேவை வீழ்த்தினார்.

ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது. இதில் ஜோஷ்னா, ஆசிய விளையாட்டில் தனது 6வது பதக்கத்தை உறுதி செய்தார். ஏற்கனவே 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தார்.

குத்துச்சண்டை: சபாஷ் சச்சின்

ஆண்களுக்கான குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவாச், ஜோர்டானின் முகமது அத்னன் அபு ஜாஜே மோதினர். இதில் சச்சின் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

* பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில், இந்தியாவின் பிரீத்தி பவார், 'நடப்பு சாம்பியன்' வடகொரியாவின் பாங் சோல் மோதினர். கடந்த முறை வெண்கலம் வென்ற பிரீத்தி 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

பாட்மின்டன்: சாத்விக்-சிராக் அதிர்ச்சி

பாட்மின்டன் போட்டிக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-12, 10-21, 14-21 என, தாய்லாந்தின் பக்கபோன், பேராட்சாய் சுக்பன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

* பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி 21-16, 16-21, 21-16 என வியட்நாமின் ஹியு யான் டிசாங், லோக் லோக் லுய் ஜோடியை வீழ்த்தியது.

* கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-8, 21-7 என, மாலத்தீவின் அப்துல் ரசாக் அபினாத், நிபால் அகமது ஜோடியை வென்றது. அடுத்து நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய ஜோடி 22-20, 24-22 என, மலேசியாவின் ஷெவோன் ஜெமி, சூன் ஹுவாட் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

* பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-9, 21-10 என, வடகொரியாவின் யு மி சாங்கை தோற்கடித்தார்.

டேபிள் டென்னிஸ்: யாஷஸ்வினி வெற்றி

ஆசிய விளையாட்டு டேபிஸ் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி, சிரியாவின் ஹென்ட் ஜாஜா மோதினர். இதில் யாஷஸ்வினி 4-1 (11-5, 11-5, 11-8, 8-11, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 1-4 (7-11, 8-11, 13-11, 7-11, 7-11) என, வடகொரியாவின் பியோன் சாங் கியோங்கிடம் தோல்வியடைந்தார்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மனுஷ் ஷா 4-0 (11-9, 11-6, 11-6, 11-5) என, ஈரானின் பென்யமின் பராஜியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மானவ் தாக்கர் 2-4 (11-4, 2-11, 7-11, 7-11, 11-4, 3-11) என, வடகொரியாவின் யு டே ரியாங்கிடம் தோல்வியடைந்தார்.

பளுதுாக்குதல்: நிருபமா ஏமாற்றம்

பெண்களுக்கான பளுதுாக்குதல் 61 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் நிருபமா தேவி பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 93, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 124 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கிய நிருபமா, 7வது இடம் பிடித்தார்.

நீச்சல்: சஜன் பிரகாஷ் '7'

ஆண்களுக்கான நீச்சல், 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவு பைனலில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். இலக்கை, ஒரு நிமிடம், 58.42 வினாடியில் கடந்த இவர், 7வது இடம் பிடித்தார்.

* ஆண்களுக்கான 200 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு பைனலில் இந்தியாவின் ரிஷாப் தாஸ் (ஒரு நிமிடம், 58.77 வினாடி), உத்கர்ஷ் பாட்டீல் (2 நிமிடம், 00.94 வினாடி) முறையே 6, 7வது இடத்தை கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us