/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் மீண்டும் காமன்வெல்த் போட்டி
/
இந்தியாவில் மீண்டும் காமன்வெல்த் போட்டி
ADDED : பிப் 17, 2025 11:12 PM

புதுடில்லி: ''வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டி நடத்த வேண்டும். 2036ல் ஒலிம்பிக் நடத்த திட்டமிட்டுள்ள இந்தியாவுக்கு இது உதவியாக இருக்கும்,'' என தலைமை அதிகாரி கேட் சாட்லெயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக 2010ல் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. அடுத்து 2036ல் ஒலிம்பிக் நடத்த முயற்சிகள் நடக்கின்றனர். இதற்கான 'டாப்-10' நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் கூட்டமைப்பு தலைமை அதிகாரி கேட் சாட்லெயர் கூறியது:
ஒரு தேசத்தின் பிம்பத்தை சிறப்பானதாக உருவாக்குவதில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் உள்ளது. விளையாட்டு சக்தியாக உலகளவில் அங்கீகரிக்கப்படுவது, தேசத்தின் செல்வாக்கை உலகில் அதிகரிக்கும்.
தற்போது இந்தியா, சரியான தலைமை, உட்கட்டமைப்புடன் ஒலிம்பிக் நடத்தும் நாடுகளில் ஒன்றாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் விளையாட்டு கிடைக்கும் அரசியல் ஆதரவு, ஆர்வம் வியப்பாக உள்ளது.
ஒலிம்பிக் நடத்துவது என்பது வியக்கத்தக்க சாதனை. இதற்கு முன் வரும் 2030ல் இந்தியாவில் மீண்டும் காமன்வெல்த் போட்டி நடத்த வேண்டும். இந்தியாவின் ஒலிம்பிக் லட்சியம் நிறைவேற இது சரியான வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

