UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 05:44 PM
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,‘ ஆசிய பாரா விளையாட்டு முதல் நாளில், மோனா அகர்வால், சாதனை படைத்து தங்கம் வென்றது கூடுதல் ஸ்பெஷலாக அமைந்தது. துல்லியம், மன உறுதி, நிதானத்துடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகள். வெள்ளி வென்ற அவனி லெஹராவின் மன உறுதி, தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது,’ என தெரிவித்துள்ளார்.
‘வீல் சேர்’ வீராங்கனை
ராஜஸ்தானை சேர்ந்தவர் மோனா அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்த போது கொடுத்த போலியோ சொட்டு மருந்து ஒத்துக் கொள்ளாததால், இவரால் நடக்க முடியாமல் போனது. ‘வீல் சேர்’ வீராங்கனையாக மாறினார். பாரா குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், வலு துாக்குதலில் அசத்தினார். பின் துப்பாக்கி சுடுதலுக்கு மாறினார்.
‘வீல் சேர்’ கூடைப்பந்து வீரர் ரவிந்திராவை மணந்தார். அவிக், ஆர்வி என இரண்டு குழந்தைகள் உண்டு. பாரிஸ் பாராலிம்பிக்கில் (2024) வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் (2026) தங்கம் வென்றார். தற்போது ஆசிய பாரா விளையாட்டில் அசத்தியுள்ளார்.
விபத்து பாதிப்பு
ராஜஸ்தானை சேர்ந்தவர் அவனி லெஹரா. 11வது வயதில் கார் விபத்தில் சிக்கியதால், இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட, ‘வீல் சேர்’ வாழ்க்கைக்கு மாறினார். தன்னம்பிக்கையுடன் போராடிய அவனி, டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இம்முறை ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி வென்றுள்ளார்.
விவசாயி மகன்
நிஷாத் குமார், இமாச்சல பிரதேசத்தின் படவுன் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன். மிகவும் சுறுசுறுப்பானவர். தனது 8 வயதில் பொம்மை வியாபாரியின் பேச்சை கேட்டு, தனது அம்மாவை பார்க்க வீட்டுக்கு வேகமாக ஓடினார். அப்போது, வைக்கோல் வெட்டும் இயந்திரத்தின் கத்தி, வலதுகை மணிக்கட்டில் தாக்கியதால், கையை அகற்றும் நிலை ஏற்பட்டது.
இதில் இருந்து மீண்டு, பாராலிம்பிக்கில் 2 வெள்ளி (2021, 2024) வென்ற இவர், முதன் முறையாக ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் கைப்பற்றியுள்ளார்.
