UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 05:44 PM

* பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் ‘சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், ஸ்ரீகாந்த், தான்வி சர்மா, அஷ்மிதா, தேவிகா, சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, காயத்ரி கோபிசந்த், திரீசா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக, முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் இடம் பிடித்துள்ளார்.
* ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் (அக். 23–31) நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில், கபடி சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் நவீன் கோயத், சுர்ஜீத் நார்வல், பர்வேஷ், பாரத் ஹூடா, நிதேஷ் குமார், யோகேஷ் தாஹியா, நீரஜ் நார்வல் என 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* உ.பி., மாநிலம் ஜான்சியில், சீனியர் ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. இதன் ‘டிவிசன்–ஏ’ அரையிறுதியில் ஹரியானா அணி 4–2 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் பஞ்சாப்பை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் மத்திய பிரதேச அணி 5–3 என, உ.பி., அணியை வென்றது.
