தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சைப்ரஸ் செஸ்: திவ்யா முதல் வெற்றி

சைப்ரஸ் செஸ்: திவ்யா முதல் வெற்றி

சைப்ரஸ் செஸ்: திவ்யா முதல் வெற்றி


ADDED : மார் 24, 2025 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிகோசியா: சைப்ரஸ் செஸ் 8வது சுற்றில் இந்தியாவின் திவ்யா வெற்றி பெற்றார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ' தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் 8வது சுற்றில் திவ்யா, ஆஸ்திரியாவின் படெல்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 71வது நகர்த்தலில் முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா (கருப்பு), ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா (வெள்ளை) மோதினர். இப்போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

எட்டு சுற்றுகளின் முடிவில் ஹரிகா (4.5 புள்ளி), திவ்யா (3.5) முறையே 3, 7வது இடத்தில் உள்ளனர். முதலிரண்டு இடங்களில் உக்ரைனின் அனா முசிசுக் (5.5 புள்ளி), சீனாவின் ஜினர் ஜு (5.5) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us