தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : நவ 21, 2026 11:00 PM

ADDED : நவ 21, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 11:00 PM ADDED : நவ 21, 2026 08:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இந்துாரில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனுபமா, ஹாங்காங்கின் சோ மேன் யான் மோதினர். இதில் அனுபமா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2வது முறையாக (2025, 2026) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

* ஹங்கேரியில், 'டோட்டல் செஸ்' உலக சாம்பியன்ஷிப் 'பைலட்' தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 0-2 என, ஆர்மேனியாவின் ஹைக் மார்டிரோஸ்யானிடம் தோல்வியடைந்து, 10வது இடம் பிடித்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா 2-0 என, அமெரிக்காவின் அபிமன்யு மிஷ்ராவை வீழ்த்தி, 21வது இடத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை வைஷாலி, கடைசி (24வது) இடம் பிடித்தார்.

* சீனாவில், ஆசிய கோப்பை வில்வித்தை ரேங்கிங் தொடர் நடந்தது. இதில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 3 வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்தன. கணேஷ் மணி ரத்தினம் திருமுரு (2 வெள்ளி), அதிதி சுவாமி (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) தலா 2 பதக்கம் கைப்பற்றினர்.

* கொல்கட்டாவில், பெண்களுக்கான சர்வதேச ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஷ்ருதி, அகான்ஷா கோஷ், ஜென்சி, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் (19 வயது) 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் (நவ. 26, 29, டிச. 1, 3, 6, இடம்: வதோதரா) பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணிக்கு கேப்டனாக விக்கெட் கீப்பர் பவிகா அஹிரே, துணை கேப்டனாக அனாதி தாக்டே நியமிக்கப்பட்டனர்.

* கொல்கட்டாவில், வரும் டிச. 20ல் டாடா ஸ்டீல் 'வேர்ல்டு 25 கே' ஓட்டம் நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us