UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:36 PM
* இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். ஜிம்பாப்வேக்கு எதிரான 2 வது இரு போட்டியில் 126 ரன் விளாசினார். இதையடுத்து 2 இடம் முந்திய இவர், ஒருநாள் பேட்டர் தரவரிசையில் 8வது இடம் பிடித்தார்.
* கஜகஸ்தானின் அஸ்தானாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 79 கிலோ பிரிவில் காஜல், 50 கிலோ பிரிவில் நீலம் என இரண்டு இந்திய வீராங்கனைகளும் பைனலுக்கு முன்னேறினர்.
* ஜெர்மனியில், ஹைலோ ஓபன் ‘சூப்பர் 500’ பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மேஹனா, 9–21, 10–21 என இலங்கையின் ரனித்மாவிடம் தோல்வியடைந்தார்.
* இந்தியாவில் ‘சீனியர்’ பெண்கள் அணிகளுக்கான ‘டி–20’ எலைட் டிராபி தொடர் நடக்கிறது. லக்னோவில் நடந்த போட்டியில் தமிழக அணி (155/8), திரிபுராவை (123/5) 32 ரன் வித்தியாசத்தில் வென்றது.
* அஜர்பெய்ஜானில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இந்திய அணி 3வது போட்டியில் 1–6 என செனகலிடம் தோற்றது.
* கனடாவில் பெண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் அனாஹத் சிங், 11–6, 4–11, 11–5, 11–7 என இங்கிலாந்தின் சாராவை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
