உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:37 PM

அ நிறம் | அளவு
ஆமதாபாத்: ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில், நேற்று தான்சானியாவை சந்தித்தது. முதல் பாதியில் இந்தியா 25–8 என முன்னிலை பெற்றது. முடிவில் இந்திய அணி 48–20 என வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 5வது வெற்றியை பதிவு செய்தது.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி, பங்கேற்ற 4 போட்டியிலும் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இலங்கையை (அக். 30) எதிர்கொள்கிறது.
