தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 இந்திய பெண்கள் அணிக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த, முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,‘‘ கடந்த 2025ல் உலக கோப்பை கைப்பற்றியதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பு தருகிறது. வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே போன்ற மனநிலையுடன் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

 தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப்பில் நேற்று துவங்கியது. 69வது பிரிவில் இடம் பெற்றுள்ள சீனியர் வீராங்கனை மணிகா பத்ரா, மோவோலிபியை 3–0 என வென்றார்.

 இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் கால்பந்து கிளப் தொடர் ஐ.டபிள்யு.எல்., நடக்கிறது. மேற்கு வங்கத்தின் கல்யாணி மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மதுரையின் சேது அணி, 2–1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவின் கிக்ஸ்டார்ட் அணியை வீழ்த்தியது.

 இந்துாரில் உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியாவின் கமால் சாவ்லா, லட்சுமண், பியுஸ், ரன்வீர் உட்பட 6 இந்தியர்கள், பைனல் ஸ்டேஜிற்குள் நுழைந்தனர்.

 இந்திய ஹாக்கி அணி கேப்டன் சலிமா கூறுகையில், ‘‘உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டது போல (5வது இடம்) ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் (வரும் நவ. 19–28) நம்பிக்கையுடன் விளையாடுவோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us