/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டில்லியிடம் வீழ்ந்தது குஜராத்: புரோ கபடி லீக் போட்டியில்
/
டில்லியிடம் வீழ்ந்தது குஜராத்: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியிடம் வீழ்ந்தது குஜராத்: புரோ கபடி லீக் போட்டியில்
டில்லியிடம் வீழ்ந்தது குஜராத்: புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : அக் 10, 2025 10:29 PM

சென்னை: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி, குஜராத்தை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னையில் நடந்த லீக் போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. குஜராத் அணியினரை 'ஆல்-அவுட்' செய்த டில்லி அணி, முதல் பாதி முடிவில் 21-14 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் அசத்திய டில்லி அணி, ஆட்டநேர முடிவில் 39-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டில்லி அணிக்கு அக் ஷித் (12 புள்ளி), அஜின்கியா பவார் (5) கைகொடுத்தனர். குஜராத் சார்பில் ஹிமான்ஷு சிங் 11 புள்ளி பெற்றார். ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்த
டில்லி அணி, 14 போட்டியில், 12 வெற்றி, 2 தோல்வி என, 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஒன்பதாவது தோல்வியை பெற்ற குஜராத் (8 புள்ளி) 9வது இடத்தில் உள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் மும்பை அணி 48-29 என்ற கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. மும்பை அணி 7 வெற்றி உட்பட 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது.
பைனல் எப்போது
இன்று முதல் லீக் போட்டிகள் டில்லியில் நடக்கவுள்ளன. லீக் சுற்று அக். 23ல் முடிகிறது. அதன்பின் 'பிளே-ஆப்' சுற்று (அக். 25-29), பைனல் (அக். 31) டில்லியில் நடக்கவுள்ளன.