/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா இரண்டாவது இடம்
/
ஹாக்கி: இந்தியா இரண்டாவது இடம்
ADDED : அக் 18, 2025 10:41 PM

ஜோஹர் பஹ்ரு: மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் நடந்தது.
நேற்று நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
போட்டியின் 13வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இந்த வாய்ப்பை கிராப்பெலார் கோலாக மாற்றினார். 17வது நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது.
இம்முறை எக்கா இதை கோலாக மாற்ற ஸ்கோர் 1-1 என ஆனது. போட்டி முடிவதற்கு ஒரு நிமிடம் இருந்த போது, கிராப்பெலார் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது. ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.