தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கி: வெல்லுமா இந்தியா * இன்று நெதர்லாந்துடன் மோதல்

உலக ஹாக்கி: வெல்லுமா இந்தியா * இன்று நெதர்லாந்துடன் மோதல்

உலக ஹாக்கி: வெல்லுமா இந்தியா * இன்று நெதர்லாந்துடன் மோதல்


ADDED : ஆக 21, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் இன்று இந்திய அணி, வலிமையான நெதர்லாந்தை சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, வேல்ஸ், பாகிஸ்தானை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோற்றது.

இரண்டாவது சுற்று

புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பெற்ற இந்தியா, அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இதில் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள உலகின் 'நம்பர்-8' இந்திய அணி, 'ஏ' பிரிவில் முதல் இரு இடம் பெற்ற நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளுடன் மோத வேண்டும்.

இன்று, உலகின் 'நம்பர்-2' அணியான, நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

கடந்த 1975க்குப் பின் இதுவரை கோப்பை வெல்லாத நிலையில், இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கலாம் என்ற சூழலில் இந்தியா உள்ளது.

லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் பாதியில் 2-1 என முன்னிலையில் இருந்த இந்தியா, 2-4 என தோற்றது. இதேபோல பாகிஸ்தானுடன் 3-0 என இருந்த இந்தியா, கடைசியில் 5-3 என வென்றது. இந்த இரு போட்டியிலும் துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட போதும், பின் எதிரணியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தனர்.

வெற்றி நம்பிக்கை

இன்று எவ்வித தவறுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. சமீபத்திய புரோ லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என நெதர்லாந்தை வென்றது. அப்போது கோல் அடித்த ஜுக்ராஜ் சிங், அபிஷேக், ராஜேந்தர் சிங், இன்றைய அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (5 கோல்) சிறப்பான பார்மில் உள்ளார். இவர்களுடன், அனுபவ மன்பிரீத் சிங், மன்தீப் சிங் கைகொடுத்தால் வெற்றி பெறலாம்.

மிரட்டும் 'தாக்குதல்'

உலகின் அபாயகரமான தாக்குதல் வீரர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக நெதர்லாந்து உள்ளது. மூன்று முறை (1973, 1990, 1998) உலக கோப்பை வென்றுள்ளது. இம்முறை லீக் சுற்றில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, ஜப்பான் என மூன்று அணிகளையும் வீழ்த்தியது. 1973ல் இம்மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி, முதன் முறையாக உலக சாம்பியன் ஆனது. இன்றும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இந்தியா ஏமாற்றம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக கோப்பை ஹாக்கி தொடர் (பெல்ஜியம், நெதர்லாந்து) முதன் முறையாக நடக்கிறது. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது முதல் இரு போட்டியில் இங்கிலாந்து (3-6), பல்கேரியாவிடம் (2-7) தோற்றது. நேற்று மூன்றாவது போட்டியில் ஸ்பெயினிடம் 2-5 என்ற கணக்கில் வீழ்ந்தது. அடுத்து நெதர்லாந்தை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us