தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய ‘ரிகர்வ்’ வில்வித்தையில் வரலாறு படைத்தது இந்தியா

ஆசிய ‘ரிகர்வ்’ வில்வித்தையில் வரலாறு படைத்தது இந்தியா

ஆசிய ‘ரிகர்வ்’ வில்வித்தையில் வரலாறு படைத்தது இந்தியா


UPDATED : அக் 03, 2026 03:38 PM

ADDED : அக் 02, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 03:38 PM ADDED : அக் 02, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அய்ச்சி: ஆசிய வில்வித்தை, ‘ரிகர்வ்’ பிரிவில் முதல் தங்கம் வென்று இந்தியா, வரலாறு படைத்தது.

ஆசிய விளையாட்டு வில்வித்தையில் நேற்று ‘ரிகர்வ்’ பிரிவில் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அன்கிதா, கும்கும், கீர்த்தி இடம் பெற்ற அணி, அரையிறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் 5–1 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் வலிமையான தென் கொரியாவை சந்தித்தது.

முதல் இரு செட் சமன் (54–54, 56–56) ஆக, ஸ்கோர் 2–2 என இருந்தது. மூன்றாவது செட்டை இந்தியா 55–51 என வசப்படுத்த, 4–2 என முந்தியது. கடைசி செட் மீண்டும் சமன் (54–54) ஆனது. இருப்பினும் இந்திய பெண்கள் அணி 5–3 என வெற்றி பெற்றது. ‘ரிகர்வ்’ பிரிவில் முதன் முறையாக தங்கம் வென்று சாதித்தது இந்தியா.

கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் கும்கும், திராஜ் பொம்மதேவரா இடம் பெற்ற அணி, 5–3 என ஜப்பாவை வீழ்த்தியது. அடுத்து பைனலில் இந்தியா, சீனா மோதின. இதல் முதல் மூன்று செட் முடிவில் இந்தியா 2–4 என பின்தங்கியது. கடைசி செட் சமன் ஆக, இந்தியா 3–5 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.

ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் திராஜ், யாஷ்தீப் சஞ்சய், நீரஜ் இடம் பெற்ற இந்திய அணி, 6–0 என ஈரானை வீழ்த்தியது. அடுத்து பைனலில் இந்திய அணி 1–5 என தென் கொரியாவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us