/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக சாம்பியனை வென்ற பவானி தேவி
/
உலக சாம்பியனை வென்ற பவானி தேவி
ADDED : மார் 11, 2025 11:32 PM

புதுடில்லி: வாள் சண்டை போட்டியில் ஒலிம்பிக், முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தினார் பவானி தேவி.
கிரீசில் சர்வதேச வாள் சண்டை போட்டி நடக்கிறது. பெண்களுக்கான சபெர் பிரிவில் இந்தியாவின் பவானி தேவி பங்கேற்றார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், முதற்கட்ட போட்டியில் ஜப்பானின் ஒஜாகியை 22, சந்தித்தார். 2022ல் உலக சாம்பியன், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஒஜாகி, சவால் கொடுத்தார்.
இருப்பினும் பவானி தேவி 15-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். லீக் சுற்றில் 6 போட்டியில் 4ல் வெற்றி பெற்ற இவர், மூன்றாவது இடம் பிடித்தார். அடுத்து 'ரவுண்டு-64' 'நாக் அவுட்' போட்டியில் சீனாவின் ஜங் ஜின்யியை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 9-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.