தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இன்டர் மயாமி 'டிரா': ஒரு கோல் அடித்தார் மெஸ்ஸி

இன்டர் மயாமி 'டிரா': ஒரு கோல் அடித்தார் மெஸ்ஸி

இன்டர் மயாமி 'டிரா': ஒரு கோல் அடித்தார் மெஸ்ஸி


ADDED : ஆக 20, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஸ்டர்: அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடர் நடக்கிறது. செஸ்டர் நகரில் நடந்த லீக் போட்டியில் இன்டர் மயாமி, பிலடெல்பியா யூனியன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 2-2 என 'டிரா' ஆனது. இன்டர் மயாமி அணி சார்பில் ஒரு கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி, சகவீரர் கோல் அடிக்க ஒரு 'அசிஸ்ட்' செய்தார். நடப்பு சீசனில் விளையாடிய 17 போட்டியில், 13 கோல், 9 'அசிஸ்ட்' செய்துள்ளார் மெஸ்ஸி.

சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில், பெலாரசின் அரினா சபலென்கா, செக்குடியரசின் சாரா பெஜ்லெக் மோதினர். இதில் சபலென்கா 6-7, 4-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-2 என, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவாவை வென்றார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-4, 6-4 என, ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை தோற்கடித்தார்.

எக்ஸ்டிராஸ்

* இந்திய 'ஹெப்டத்லான்' வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 29. ஆசிய விளையாட்டில் (2018) தங்கம் வென்ற இவர், சமீபத்தில் நடத்திய பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* இரண்டாவது முறையாக ஊக்கமருந்து விதிமீறலில் ஈடுபட்ட இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங்கிற்கு, 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

* கான்பூரில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் (15 வயது) பைனலில், கர்நாடகாவின் தனிஷ்கா 3-2 என, மேற்கு வங்கத்தின் சதுர்யாவை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் (15 வயது) பைனலில் மஹாராஷ்டிராவின் பிரதீக் துல்சானி 3-0 என, மேற்கு வங்கத்தின் ராஜ்தீப் பிஸ்வாசை வென்றார்.

* பெங்களூருவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா, ஏமன் அணிகள் (20 வயது) மோதின. விறுவிறுப்பான இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, ஆக. 23ல் நடக்கவுள்ளது.

* மேகாலயாவின் ஷில்லாங் நகரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து அரையிறுதியில் மோகன் பகான் அணி 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது. பைனலில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us