/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மாரத்தான் தந்திரமா: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
மாரத்தான் தந்திரமா: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
மாரத்தான் தந்திரமா: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
மாரத்தான் தந்திரமா: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 23, 2024 11:33 PM

மூன்றாவது ஒலிம்பிக் போட்டி (1904, ஜூலை 1 - நவ. 23) அமெரிக்காவின் சிகாகோவில் நடக்க இருந்தது. பின், செயின்ட் லூயிஸ் நகருக்கு மாற்றப்பட்டது. முதன்முறையாக ஐரோப்பா கண்டத்துக்கு வெளியே ஒலிம்பிக் நடந்தது. ஜப்பான்-ரஷ்யா போர் நடந்ததால் 12 நாடுகளை சேர்ந்த 648 பேர் (642 வீரர், 6 வீராங்கனை) மட்டும் பங்கேற்றனர். தடகளம், வில்வித்தை, கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட 16 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் குத்துச்சண்டை, மல்யுத்தம், டெக்கத்லான் போட்டிகள் அறிமுகமாகின.
ஜிம்னாஸ்டிக்சில் செயற்கை கால்களுடன் அசத்தினார் அமெரிக்காவின் ஜார்ஜ் ஐசர். ஒரு ரயில் விபத்தில் இவரது இடது கால் துண்டிக்கப்பட்ட போதும், மனம் தளராமல் போட்டிகளில் பங்கேற்றார். மொத்தமுள்ள 10 பிரிவுகளில் 9ல் பங்கேற்ற இவர், 3 தங்கம் உட்பட, ஆறு பதக்கங்கள் பெற்றார்.
கடந்த 1904 ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் (42 கி.மீ.,) அமெரிக்க வீரர் பிரட் லார்ஸ் பங்கேற்றார். அப்போது சிறிது துாரம் ஓடிவிட்டு, பின் பந்தய தூரத்தின் பெரும் பகுதியை தனது மானேஜர் கார் மூலம் கடந்தார். எல்லைக் கோட்டுக்கு வருவதற்கு முன், மீண்டும் காரை விட்டு இறங்கி ஓடி முதலிடத்தை பெற்றார். இது தெரியவர, இரண்டாவதாக வந்த மற்றொரு அமெரிக்க வீரர் ஹிக்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
எக்ஸ்டிராஸ்
231 பதக்கம்மூன்றாவது ஒலிம்பிக்கில் 76 தங்கம். 78 வெள்ளி, 77 வெண்கலம் என 231 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது. ஜெர்மனி, கனடா அணிகள் தலா 4 தங்கம் கைப்பற்றின.