/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வியக்க வைத்த லிஸ் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 24
/
வியக்க வைத்த லிஸ் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 24
ADDED : ஜூலை 02, 2024 11:29 PM

பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் 15வது ஒலிம்பிக் போட்டி (1952, ஜூலை 19-ஆக. 3) நடந்தது. மொத்தம் 69 நாடுகளை சேர்ந்த 4932 பேர் (4411 வீரர், 521 வீராங்கனைகள்) கலந்து கொண்டனர். இம்முறை குதிரையேற்ற போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில், டென்மார்க்கின் 26 வயது குதிரையேற்ற வீராங்கனை லிஸ் ஹார்டல் அசத்தினார். இவரது இரண்டு முழங்கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டதால், குதிரையில் ஏறுவதற்கே உதவி தேவைப்பட்டது. இருப்பினும் இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அமெரிக்கா 40 தங்கம் உட்பட 76 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய பின்லாந்து 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களுடன் 8வது இடம் கிடைத்தது.
எக்ஸ்டிராஸ்
5
ஹாக்கி போட்டியில் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணி 1952ல் பைனலுக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான பைனலில் அசத்திய இந்தியா, தொடர்ந்து ஐந்தாவது முறையாக (1928, 32, 36, 48, 52) தங்கம் வென்று ஹாக்கியில் மீண்டும் ஆதிக்கத்தை தொடர்ந்தது.