/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * துப்பாக்கிசுடுதலில் இன்று எதிர்பார்ப்பு
/
முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * துப்பாக்கிசுடுதலில் இன்று எதிர்பார்ப்பு
முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * துப்பாக்கிசுடுதலில் இன்று எதிர்பார்ப்பு
முதல் பதக்கம் வெல்லுமா இந்தியா * துப்பாக்கிசுடுதலில் இன்று எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2024 11:26 PM

பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இன்று இந்தியா முதல் பதக்கம் வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இன்று துப்பாக்கிசுடுதல் போட்டியில், முதல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலை பொறுத்தவரையில், இந்தியா இதுவரை 4 பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றது. ஆனால் கடந்த இரு ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் வெல்லவில்லை.
இம்முறை எப்போதும் இல்லாத வகையில் 21 பேர் கொண்ட படை களமிறங்கியுள்ளது. துப்பாக்கிசுடுதலில் நடக்கவுள்ள 15 போட்டியிலும் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மனுபாகர், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், அஞ்சும் மவுத்கில், இளவேனில் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கை பொறுத்தவரையில் திறமை மட்டுமல்ல, வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். 22 வயதான மனுபாகர், உலக அளவில் பல்வேறு தொடரில் பதக்கங்கள் குவித்துள்ளார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில், இவரது துப்பாக்கி சரியாக வேலை செய்யாமல் போக, கடைசி வரை மீண்டு வரவே முடியவில்லை.
இம்முறை 10 மீ., ஏர் பிஸ்டல், 25 மீ., பிஸ்டல், 10 மீ., கலப்பு அணி என மூன்று போட்டிகளில் பங்கேற்கிறார். இன்று நடக்கும் தகுதிச்சுற்றில் மனுபாகர் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு முன்னேற உள்ளார்.
10 மீ., ஏர் ரைபிள் அணிகளுக்கான போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியா சாதிக்கும் பட்சத்தில், ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை இந்தியா தட்டிச் செல்லலாம்.
ஆண்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் 'டிராப்' பிரிவில் தமிழகத்தின் பிரித்விராஜ், அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, சந்தீப் சிங், அர்ஜுன் உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.