புதிய விளையாட்டு 'ஒமேகாபால்' * ஒரே நேரத்தில் மூன்று அணிகள் போட்டி
புதிய விளையாட்டு 'ஒமேகாபால்' * ஒரே நேரத்தில் மூன்று அணிகள் போட்டி
ADDED : ஏப் 28, 2026 11:22 PM

சென்னை: கால்பந்து போன்ற விளையாட்டு ஒமேகாபால். அதிவேகமாக விளையாட்டான இதை, கடந்த 2022ல் ஈ.எஸ்.பி.என்., இணையதளத்தின் முன்னாள் ஊழியர் ஆன்டனி டிட்மான் (அமெரிக்கா) அறிமுகம் செய்தார். இந்தியாவில் இப்போட்டியை சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த போட்டியில் பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
போட்டி எப்படி
கால்பந்து போன்ற இந்த விளையாட்டில், ஒரே நேரத்தில் மூன்று அணிகள் விளையாடலாம். ஒவ்வொரு அணியிலும் தலா 5 பேர் (1 கோல் கீப்பர்+4 வீரர்கள்) களமிறங்குவர்.
* மைதானம் 53-55 மீ., அளவில் வட்ட வடிவில் (கால்பந்து மைதானத்தில் பாதி) இருக்கும். மைதானத்தில் மூன்று கோல் போஸ்ட் இருக்கும்.
* தலா 13 நிமிடம் கொண்ட மூன்று பகுதிகளாக போட்டி நடக்கும். 'ஆப் சைடு' கிடையாது.
* ஒவ்வொரு அணியும், மற்ற இரு அணிகளின் போஸ்ட்டில், கோல் அடிக்கலாம். மற்றொரு அணி இதை தடுக்கும். முடிவில் அதிக கோல் அடிக்கும் அணி வெல்லும்.
* 'சேம் சைடு' கோல் அடித்தால், மற்ற இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசிலில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. விரைவில் இந்தியாவிலும் வேகமாக வளர்ச்சி அடையலாம்.
