sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பாராலிம்பிக்: துளசிமதி, சுஹாஸ் வெற்றி

/

பாராலிம்பிக்: துளசிமதி, சுஹாஸ் வெற்றி

பாராலிம்பிக்: துளசிமதி, சுஹாஸ் வெற்றி

பாராலிம்பிக்: துளசிமதி, சுஹாஸ் வெற்றி

1


ADDED : ஆக 29, 2024 11:05 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:05 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாராலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் துளசிமதி, சுஹாஸ் வெற்றி பெற்றனர்.

பிரான்சின் பாரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. பாட்மின்டன் 'ஏ' பிரிவில், கலப்பு இரட்டையர் போட்டி நடந்தது. இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), நிதேஷ் குமார் ஜோடி, சக இந்தியாவின் சுஹாஸ், பாலக் கோலி ஜோடியை சந்தித்தது. இதில் துளசிமதி ஜோடி 21-14, 21-17 என வெற்றி பெற்றது.

பெண்கள் ஒற்றையர் போட்டியில், கால்நடை அறிவியல் மாணவி துளசிமதி, இத்தாலியின் ரோசா மார்கோவை சந்தித்தார். இதில் துளசிமதி 21-9, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

சுஹாஸ் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ், இந்தோனேஷியாவின் ராம்தானி மோதினர். இதில் சுஹாஸ், 21-7, 21-5 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் போட்டியில் நிதேஷ் குமார், 21-13, 18-21, 21-18 என சக வீரர் மனோஜை வென்றார்.

'பி' பிரிவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சுகந்த் கடம், 17-21, 21-15, 22-20 என மலேசியாவின் முகமது அமினை வீழ்த்தினார். பெண்கள் இரட்டையரில் சோலைமலை, சுமதி (தமிழகம்) ஜோடி, 21-23, 11-21 என அமெரிக்காவின் மைல்ஸ், சிமோன் ஜோடியிடம் தோல்வியடைந்தது. பெண்கள் ஒற்றையரில் மன்தீப் கவுர், 8-21, 14-21 என நைஜீரியாவின் மரியத்திடம் தோற்றார்.

'சி' பிரிவில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி, 21-12, 21-14 என பிரான்சில் மிலெனாவை சாய்த்தார். ஆண்கள் ஒற்றையரில் தருண் ('டி') 21-17, 21-19 என பிரேசிலின் ஜேவியரை வென்றார்.

மானசி ஏமாற்றம்

பெண்கள் ஒற்றையர் 'ஏ' பிரிவு போட்டியில் 2019 உலக சாம்பியன் இந்தியாவின் மானசி, 21-16, 13-21, 18-21 என இந்தோனேஷியாவின் இக்தியாரிடம் தோல்வியடைந்தார்.



சைக்கிளிங்: ஜோதி ஏமாற்றம்

பெண்களுக்கான 3000 மீ., சைக்கிளிங் தகுதிப் போட்டி நடந்தது. இந்தியாவின் ஜோதி கடேரியா, 4 நிமிடம், 53.929 வினாடி நேரத்தில் பந்தய துாரத்தை கடந்து, 10 வது இடம் பிடித்தார்.

நேரடி ஒளிபரப்பு இல்லை

உள்ளூர் கிரிக்கெட் கூட 'லைவ்' செய்யப்படு்ம் இந்த காலத்தில், பாராலிம்பிக் போட்டியை இந்தியாவில் எந்த 'டிவி' யிலும் நேரடியாக ஒளிபரப்பாதது வேதனை. அலைபேசியில் 'ஜியோ சினிமா' வில் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஷீத்தல் தேவி 'நம்பர்-2'

பெண்களுக்கான வில்வித்தை, காம்பவுண்டு பிரிவு தரவரிசை போட்டி நேற்று நடந்தன. இந்தியாவின் ஷீத்தல் தேவி, மொத்தம் 703 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இந்த சீசனில் இவரது சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா, 682 புள்ளியுடன் 9வது இடம் பெற்றார்.

* கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி, (703), ராகேஷ் குமார் (641) ஜோடி 1344 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது.

* ஆண்களுக்கான 'ரீகர்வ்' பிரிவு தரவரிசை போட்டியில், 2021 டோக்கியோ பாாரலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ஹர்விந்தர் சிங் (637) 9வது இடம் பெற்றார்.

அருணா அதிர்ச்சி

பெண்களுக்கான பாரா டேக்வாண்டோ, காலிறுதிக்கு முந்தைய 'ரவுண்டு-16' சுற்றில் இந்தியாவின் அருணா தன்வர், துருக்கியின் நர்சிஹானை சந்தித்தார். இதில் அருணா 0-19 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

கரோலின் 'முதல்' தங்கம்

பாரிஸ் பாராலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார் நெதர்லாந்தின் கரோலின் குரூட். பாரா டிராக் சைக்கிளிங் போட்டியில் 500 மீ., 'டைம் டிரையல்' பிரிவில் 35.390 வினாடியில் வந்து, உலக சாதனை படைத்தார்.

கலக்கல் துவக்க விழா

பாரிசின் பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில், பாராலிம்பிக் துவக்க விழா நான்கு மணி நேரம் நடந்தது. அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் ஏந்தி வந்தனர்.

பிறக்கும் போது இடது கை இழந்த பிரான்ஸ் பாடகர் லக் புரூயெரே திறமை வெளிப்படுத்தினார். அடுத்து பாராலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, வீரர், வீராங்கனைகள் உறுதிமொழி எடுத்தனர். சமீபத்தில் ஒலிம்பிக் ஜோதி ஒளிர்ந்த ஜார்டின் டெஸ் டுய்லெரிஸ் என்ற இடத்தில், பாராலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நடந்தது.

முன்னாள் வீல்சேர் டென்னிஸ் சாம்பியன் மைக்கேல் ஜெரிமியாஸ் ஜோதியை கொண்டு வந்தார். பின் சார்லஸ் ஆன்டனி, கெய்ட்டா, பேபியன், அலெக்சிஸ், எலோடை லோரண்டி என ஐந்து பிரான்ஸ் பாராலிம்பிக் நட்சத்திரங்கள் இணைந்து, எரிபொருள் பயன்படுத்தப்படாத, எலக்ட்ரிக் ஜோதியை ஏற்றினர். இதன் மேலே பலுான் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்பகுதியில் உள்ள வளையத்தில் 40 எல்இடி விளக்கு ஒளியின் மூலம் நிஜமான தீ பிழம்பு போல ஜோதி ஒளிர்கிறது. இரவில், வானில் பலுான் மிதக்கும். துவக்க விழா நிகழ்ச்சிகளை 50,000 பேர் நேரில் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us