/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஔிரும் பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி
/
ஔிரும் பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி
ADDED : ஏப் 16, 2024 10:59 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஏற்றப்பட்டது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நேற்று கிரீசின் பாரம்பரிய ஒலிம்பியா என்ற இடத்தில் நடந்தது.
பாரம்பரிய உடை அணிந்த பெண்கள், சூரிய ஆற்றலைப் குவிந்த கண்ணாடி பாத்திரத்தில் விழச் செய்து, எரிபொருளால் ஆன பேடனை கொண்டு இயற்கையான முறையில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றுவர். நேற்று பாரிசில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க பாத்திரத்தில் இருந்த ஜுவாலையை நடிகை மேரி மினா கொண்டு வந்தார். இதில் இருந்து ஜோதி ஏற்றப்பட்டது. பின் வெண் புறா பறக்கவிடப்பட்டது.
ஒலிம்பிக் படகு வலித்தலில் (2021) தங்கம் வென்ற வீரர் ஸ்டெபானசிடம் முதன் முறையாக ஒலிம்பிக் ஜோதி, ஆலிவ் மரத்தின் இலை வழங்கப்பட்டது. அடுத்து 2004 ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற பிரான்சின் நீச்சல் வீராங்கனை மானாடாவ்டோ பெற்றுக் கொள்ள ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் துவங்கியது.
இங்கிருந்து பிரான்ஸ் முழுவதும் 68 நாளில் 400 நகரங்கள் வழியாக, 5000 கி.மீ., துாரம் பயணம் செய்ய உள்ளது. ஏப். 26ல் ஏதென்சில் உள்ள பாரிஸ் ஒலிம்பிக் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும்.

