/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் பிரிதீஸ்மிதா: யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்
/
தங்கம் வென்றார் பிரிதீஸ்மிதா: யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்
தங்கம் வென்றார் பிரிதீஸ்மிதா: யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்
தங்கம் வென்றார் பிரிதீஸ்மிதா: யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்
ADDED : அக் 26, 2025 11:04 PM

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் பிரிதீஸ்மிதா தங்கம், வெள்ளி வென்றார்.
பஹ்ரைனின் மனாமா நகரில் ஆசிய யூத் விளையாட்டு நடக்கிறது. 40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 44 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரிதீஸ்மிதா போய் 16, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 66 கிலோ துாக்கிய பிரிதீஸ்மா, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். யூத் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ துாக்கி இருந்தார்.
'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 92 கிலோ துாக்கிய ஒடிசா வீராங்கனை பிரிதீஸ்மிதா, உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 40 கிலோ பிரிவில் உலக சாதனை (76 கிலோ) படைத்திருந்தார். ஒட்டுமொத்தமாக 158 கிலோ துாக்கிய இவர், முதலிடத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 24.43 வினாடியில் கடந்த இந்தியாவின் பூமிகா, 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என, 20 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (28 தங்கம், 19 வெள்ளி, 8 வெண்கலம்) தொடர்கிறது.

