/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: பெங்கால் கலக்கல்
/
புரோ கபடி: பெங்கால் கலக்கல்
UPDATED : அக் 24, 2024 10:10 PM
ADDED : அக் 24, 2024 10:05 PM

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணி 32-29 என உ.பி., அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. நேற்று, ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், உ.பி., யோத்தாஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் பெங்கால் அணி 12-11 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து அசத்திய பெங்கால் அணியினர், உ.பி., வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். இரண்டாவது பாதியில் பெங்கால் 20, உ.பி., 18 புள்ளி பெற்றன. ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 32-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்கால் அணிக்கு மனிந்தர் சிங் (8 புள்ளி), சுஷில் கம்ப்ரேகர் (7), நிதின் தங்கர் (7) கைகொடுத்தனர். உ.பி., அணி சார்பில் 'ஆல்-ரவுண்டர்' பாரத் 13 புள்ளி பெற்றார்.
மற்றொரு லீக் போட்டியில் ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 37-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.