/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குஜராத்தை வென்றது பாட்னா * புரோ கபடி தொடரில்...
/
குஜராத்தை வென்றது பாட்னா * புரோ கபடி தொடரில்...
ADDED : நவ 11, 2024 11:09 PM

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 40-27 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வென்றது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று, நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் குஜராத், பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துவக்கத்தில் இருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளி எடுத்தன. போட்டியின் 16 வது நிமிடத்தில் குஜராத் அணி 15-13 என முந்தியது.
பின் சுதாரித்துக் கொண்ட பாட்னா அணிக்கு தேவங்க் அடுத்தடுத்து புள்ளி எடுக்க, முதல் பாதியில் 21-16 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, 40-27 என்ற புள்ளிக்கணக்கில் இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. பாட்னா வீரர் அயான் 10, தேவங்க் 6 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.
இதுவரை நடந்த போட்டி முடிவில் புனே (30), மும்பை (29), ஹரியானா (26) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. 8 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி, 1 'டிரா' செய்த தமிழ் தலைவாஸ் அணி, 21 புள்ளியுடன் 8 வது இடத்தில் உள்ளது.