ADDED : அக் 24, 2026 06:50 AM

ஜப்பான் வீரர் ஆதிக்கம்
ரோட்டர்டாம்: நெதர்லாந்தின் ரோட்டர்டாமில், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான ‘ஆல்–அரவுண்டு’ பிரிவு பைனலில் ஜப்பானின் டாய்கி ஹஷிமோட்டோ 25, பங்கேற்றார். இதில் 85.988 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஹஷிமோட்டோ தங்கம் வென்றார். ‘ஆல்–அரவுண்டு’ பிரிவில் தொடர்ச்சியாக 4வது முறையாக (2022, 2023, 2025, 2026) தங்கம் கைப்பற்றிய ஹஷிமோட்டோ, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 7 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 14 பதக்கம் வென்றுள்ளார்.
கிரீஸ் வீரர் முன்னேற்றம்
அல்மாட்டி: கஜகஸ்தானில், அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில், கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் மோதினர். அபாரமாக ஆடிய சிட்சிபாஸ் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மிலன் அணி ஏமாற்றம்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் போர்ன்மவுத் (இங்கிலாந்து), ஏ.சி. மிலன் (இத்தாலி) அணிகள் மோதின. இதில் மிலன் அணி 0–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் செல்டா விகோ அணி 2–1 என, ஸ்காட்லாந்தின் செல்டிக் அணியை வென்றது.
