UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 08:36 PM

டயானா ‘சாம்பியன்’
டோக்கியோ: ஜப்பானில், டபிள்யு.டி.ஏ., பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் மோதினர். இரண்டு மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஷ்னைடர் 6–4, 5–7, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஷ்னைடர் வென்ற 6வது பட்டம்.
ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி
வியன்னா: ஆஸ்திரியாவில், வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர். இதில் ஸ்வெரேவ் 4–6, 6–1, 6–7 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். இதில் அல்காரஸ் 6–4, 7–6 என வெற்றி பெற்றார்.
பார்சிலோனா கோல் மழை
பார்சிலோனா: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கிளப் கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பார்சிலோனா, டெபோர்டிவோ அலாவெஸ் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா 6–1 என வெற்றி பெற்றது. பார்சிலோனா அணிக்கு ராபின்ஹா (8, 41வது நிமிடம்), யமால் (45+1, 64வது) தலா 2, பெர்மின் லோபெஸ் (23வது), அந்தோணி கோர்டன் (81வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
