/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ரக்பி: வெள்ளி வென்றது இந்தியா
/
ரக்பி: வெள்ளி வென்றது இந்தியா
ADDED : அக் 27, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்: ஆசிய ரக்பி தொடரில் இந்திய அணி 2வது இடம் பிடித்தது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடர் நடந்தது. லீக் சுற்றில் லெபனான் (14-10), ஆப்கானிஸ்தானை (26-5) வீழ்த்திய இந்தியா முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் ஈரானை (21-7) வென்ற இந்தியா, அரையிறுதியில் 17-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை தோற்கடித்தது.
பைனலில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இதன்மூலம் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடர்களில் விளையாட தகுதி பெற்றது இந்தியா.

