ADDED : ஏப் 08, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜியாங்யின்: சாண்டா உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் முகேஷ் சவுத்ரி.
சீனாவில் 10வது 'சாண்டா' (பாரம்பரிய கலை) உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்திய சார்பில் 6 பேர் பங்கேற்றுள்ளனர். 75 கிலோ பிரிவில் அசத்திய இந்தியாவின் முகேஷ் சவுத்ரி, பைனலில் பிரான்ஸ் வீரரை சாய்த்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் குஷால் (48 கிலோ), ரவி பஞ்சால் (65), அனுஜ் குமார் (52), ரஜத் சராக் (85) தங்களது பிரிவுகளில் பைனலுக்கு முன்னேறினர். இந்திய வீராங்கனை சாவ்வி, 48 பிரிவில் பைனலுக்குள் நுழைந்தார்.

