
சார்ஜா: சார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் இரண்டு சுற்றில் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார்.
சார்ஜாவில் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நேற்று துவங்கியது. மொத்தம் 9 சுற்று கொண்ட இதில் இந்தியா சார்பில் 19 பேர் உட்பட மொத்தம் 88 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அஜர்பெய்ஜானின் சபர்லி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அர்ஜுன், கிரீசின் நிகோலசிடம் வீழ்ந்தார்.
முதல் சுற்றில் வென்ற இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம், இரண்டாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் முகமதுவை வென்றார்.
மற்றொரு போட்டியில் இனியன், ஈரானின் இடானியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இனியன், 49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனவ், கஜகஸ்தானின் அலிசரை வென்றார்.
இரண்டு சுற்று முடிவில் அரவிந்த் (2.0) 3வது இடத்தில் உள்ளார். ஆதித்யா மிட்டல் (1.5), சங்கல்ப் குப்தா (1.5), 17, 18 வது இடங்களில் உள்ளனர்.

