/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலில் ஷீத்தல் தேவி: உலக பாரா வில்வித்தையில்
/
பைனலில் ஷீத்தல் தேவி: உலக பாரா வில்வித்தையில்
ADDED : செப் 25, 2025 10:58 PM

குவாங்ஜு: தென் கொரியாவின் குவான்ஜு நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, அரையிறுதியில் பிரிட்டனின் ஜோடீ கிரின்ஹாமை எதிர்கொண்டார்.
இதில் ஷீத்தல் தேவி 145-140 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக பாரா சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். இதில் துருக்கியின் கியுர் கிர்டியை சந்திக்க உள்ளார்.
ராகேஷ் அபாரம்: ஆண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், பிரிட்டனின் நாதன் மெக்குயினை சந்தித்தார். இதில் ராகேஷ் 147-143 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தோமன் குமார், 144-143 என சக வீரர் ஷ்யாம் சுந்தரை வீழ்த்தினார். பைனலில் (நாளை) ராகேஷ் குமார், தோமன் குமார் மோத உள்ளனர். ஷ்யாம் சுந்தர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்குயினை சந்திக்க உள்ளார்.