/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: அஞ்சும் முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: அஞ்சும் முதலிடம்
ADDED : மே 15, 2024 10:37 PM

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் அஞ்சும், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' தகுதிச் சுற்றில் 592 புள்ளிகளுடன் அஞ்சும் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை சிப்ட் கவுர் சர்மா (589 புள்ளி), ஆஷி (585) கைப்பற்றினர். நான்காவது, 5வது இடத்தை தலா 585 புள்ளிகளுடன் நிஷ்சல், ஷ்ரியங்கா சதாங்கி தட்டிச் சென்றனர்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' தகுதிச் சுற்றில் 590 புள்ளிகளுடன் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை சுவப்னில் குசால் (587 புள்ளி), அகில் ஷியோரன் (584) பிடித்தனர். தலா 583 புள்ளிகளுடன் செயின் சிங், நீரஜ் குமார் 4, 5வது இடத்தை கைப்பற்றினர். இப்பிரிவுக்கான பைனல் இன்று நடக்கிறது.

