/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னையில் மனு பாகர் உற்சாகம்
/
சென்னையில் மனு பாகர் உற்சாகம்
ADDED : ஆக 20, 2024 11:28 PM

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாகர் நேற்று சென்னை வந்தார். தனியார் பள்ளி சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மாணவர்களிடம் மனு பாகர் பேசியதாவது :
கடும் உழைப்பு இருந்தால் பெரிதாக சாதிக்கலாம். படிப்புகளை தாண்டி, விளையாட்டு துறையிலும் பல வேலை வாய்ப்பு உள்ளது. உலகம் சுற்ற ஆசைப் படுபவர்கள் விளையாட்டு துறையை தேர்வு செய்யுங்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது மிகவும் பதட்டமடைந்தேன். தோல்விகளால் தான் என்னால் வெற்றி அடைய முடிந்தது. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பல நாடுகள், நம்மை விட முன்னிலை வகிக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து பதக்க எண்ணிக்கையை உயர்த்த முயற்சிப்போம்.
மற்ற நாடுகளிடம் அவர்கள் குழந்தைகளை இளவயதிலேயே விளையாட்டு துறையில் முன்னோக்கி செல்ல செய்கின்றனர். அதேபோல், நம் நாட்டிலும் இத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். சமூகத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

