/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் சிப்ட் கவுர்
/
வெண்கலம் வென்றார் சிப்ட் கவுர்
ADDED : ஜூன் 12, 2025 11:02 PM

முனிக்: ஜெர்மனியின் முனிக் நகரில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற, 2022 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சிப்ட் கவுர் சம்ரா, 592 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சவுக்சே (589, 11), அஞ்சும் மவுத்கில் (586, 27), ஷ்ரேயாங்கா (582, 53) தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.
அடுத்து நடந்த 8 பேர் கொண்ட பைனலில் அசத்திய சிப்ட் கவுர், 453.1 புள்ளி எடுக்க, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.
இத்தொடரில் இதுவரை 2 வெண்கலம் மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.