தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய அணிக்கு வெள்ளி: ‘உலக’ துப்பாக்கி சுடுதலில்

இந்திய அணிக்கு வெள்ளி: ‘உலக’ துப்பாக்கி சுடுதலில்

இந்திய அணிக்கு வெள்ளி: ‘உலக’ துப்பாக்கி சுடுதலில்


ADDED : நவ 06, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (10 மீ., ‘ஏர் பிஸ்டல்’), மனு பாகர் உள்ளிட்ட இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.

கத்தார் தலைநகர் தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்’ / ‘பிஸ்டல்’ / ‘ஷாட்கன்’) தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மனு பகார் (583.21 புள்ளி), சுருச்சி இந்தர் சிங் (580.24) முறையே 3, 8 வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை சைன்யம் (575.16) 22வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய மனு பாகர் (179.9 புள்ளி), சுருச்சி (158.3) முறையே 5, 6வது இடத்தை கைப்பற்றினர்.

தனிநபர் தகுதிச் சுற்றில் வீராங்கனைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் முடிவாகும். இதன்படி மனு பாகர், சுருச்சி, சைன்யம் அடங்கிய இந்திய அணி, 1738.61 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கிடைத்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us