ADDED : ஏப் 12, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செயின்ட் லுாயிஸ்: புரோ சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை அகங்ஷா தோல்வியடைந்தார்.
அமெரிக்காவில் பெண்களுக்கான புரோ சீரிஸ் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, எகிப்தின் ஜனா ஸ்வாபி மோதினர். முதல் செட்டை 11-8 எனக் கைப்பற்றிய அகங்ஷா, 2வது செட்டை 3-11 என இழந்தார். மூன்றாவது செட்டை 11-9 என வென்ற இவர், அடுத்த இரு செட்களை 5-11, 3-11 எனக் கோட்டைவிட்டார்.
முடிவில் கோவாவை சேர்ந்த நடப்பு தேசிய சாம்பியன் அகங்ஷா சாலுங்கே 2-3 (11-8, 3-11, 11-9, 5-11, 3-11) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

