/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ் கிளாசிக்: வேலவன் வெற்றி
/
ஸ்குவாஷ் கிளாசிக்: வேலவன் வெற்றி
ADDED : அக் 06, 2025 10:43 PM

நியூயார்க்: ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் 'ரவுண்டு-16' போட்டிக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி முன்னேறினர்.
நியூயார்க்கில், ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபய் சிங் மோதினர். அபாரமாக ஆடிய வீர் சோட்ரானி 3-1 (6-11, 11-6, 11-5, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்று போட்டியில், 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 3-0 (11-2, 11-8, 14-12) என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ரமித் டான்டனுக்கு, முதல் சுற்றில் 'பை' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதால், நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுவார்.